கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள்
கனடாவின் டொராண்டோ பகுதியில் இருந்து கடந்த வருடத்தில் 35,000 க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியேறிய குடும்பங்கள் கனடாவின் பிற பகுதிகளுக்கு குடிப்பெயர்ந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
செலவு உயர்வு
2024 முதல் காலாண்டு முதல் 2025 முதல் காலாண்டு வரை டொராண்டோ பெரும்பாக பகுதியில் இருந்து மொத்தம் 2.5 இலட்சம் குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, 68,173 குடும்பங்களில் 51.5% (35,140) முழுமையாக டொராண்டோவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நகரங்களை விட்டு கிராம பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நாளாந்த செலவு உயர்வு காரணமாக மக்கள் டொராண்டோ பெரும்பாக பகுதியை விட்டு வெளியேறுவதாகத் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam