பிரித்தானியாவை விட்டு வெளியேறியோர் தொடர்பில் வெளியான தகவல்!
கடந்த ஆண்டில் 257,000 பிரித்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தற்போது தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த ஆண்டில், பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிரித்தானியர்கள் எண்ணிக்கை 77,000 என தெரிவிக்கப்பட்டது.
எனினும் உண்மையில் 257,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதாக தற்போது குறிப்பிடப்படுகின்றது.
'
எண்ணிக்கை அதிகரிப்பு
அத்துடன், பிரித்தானியாவுக்கு மீண்டும் திரும்பிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை 60,000 என முன்னர் கூறப்பட்ட நிலையில், 143,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவுக்குத் திரும்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகள் தொடர்பில் பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 13 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri