ஷேக் ஹசீனாவை நாட்டிற்கு அழைத்து வர இன்டர்போல் உதவியை நாடும் பங்களாதேஷ்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு அழைத்து வர இன்டர்போல் உதவியை அந்நாட்டு அரசாங்கம் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஜூலை - ஓகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது.
இன்டர்போல் உதவி
இந்தநிலையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பங்களாதேஷ் நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

இதனடிப்படையில், இந்தியாவில் இருந்து அவர் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கோரியுள்ள பங்களாதேஷ் அரசாங்கம், இன்டர்போல் உதவியையும் நாடியுள்ளது.
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam