டெல்லி செங்கோட்டை தாக்குதல் சம்பவம் : காணாமல் போன முக்கிய குற்றவாளிகள்
இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டை பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய மையமாக விசாரணைக் குழுக்கள் கருதும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அல்லது கல்வி பயின்ற சுமார் 10 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
டெல்லியில் நடந்த முதல் தாக்குதல்
காணாமல் போனவர்களில் மூன்று காஷ்மீரிகள் அடங்குவதாகவும் அவர்களின் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தேடுதல் வேட்டை நடந்தப்பட்டபோது அவர்கள் காணாமல் போன சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள், கடந்த 10ஆம் திகதி செங்கோட்டைக்கு வெளியே அமோனியம் நைட்ரேட் எரிபொருளுடன் கூடிய ஹுண்டாய் ஐ20 சிற்றூர்ந்தை வெடிக்கச் செய்ததாக கூறப்படும் மருத்துவர்கள் குழுவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிற்றூந்து வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். வாகனத்தின் மூலம் நிகழ்த்தப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மூலம் டெல்லியில் நடந்த முதல் தாக்குதல் இதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அல்-ஃபலாஹ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |