அநுர - தமிழரசுக் கட்சி திடீர் சந்திப்பு.. சுமந்திரனின் முக்கிய நகர்வு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள், அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே ஜனாதிபதியை திடீரென சந்தித்ததாக அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், இன்றையதினம் (19.11.2025) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவராவார். எனவே, வெளியில் நிற்கும் அவருக்கான அங்கீகாரமே இந்தச் சந்திப்பின் நோக்கம் என அருந்தவபாலன் கூறியுள்ளார்.
மேலும், இந்தச் சந்திப்பால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |