மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும்! ஜனாதிபதி உறுதி
மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று(19) பிற்பகல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதியை சந்தித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
மாகாண சபைத் தேர்தல்கள்
"ஜனாதிபதி இன்று எம்மை சந்தித்ததை நாம் மதிக்கின்றோம். ஜனாதிபதி எங்களிடம் கூறியதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி தெளிவாக எங்களிடம் கூறினார்," என்று இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி, நாட்டில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபை தேர்தல்கள் குறித்த அரசியல் எதிர்பார்ப்பை மீண்டும் அதிகரித்துள்ளது.
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam