அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு! வீதிக்கிறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்களால் பதற்றம்
அமெரிக்காவின் மினிசொட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்த ஃபெடரல் குடிவரவு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவசரப் பேச்சுவார்த்தை
இந்தச் சம்பவத்தையடுத்து, மினசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz), வெள்ளை மாளிகையுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மத்திய அதிகாரிகளால் நடத்தப்பட்ட மற்றுமொரு பயங்கரமான துப்பாக்கிச் சூடு இதுவென சாடியுள்ள அவர், வன்முறையில் ஈடுபடும் பயிற்சியற்ற ஆயிரக்கணக்கான அதிகாரிகளை மினசோட்டாவிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கடுமையாக எச்சரித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.
கடும்முறுகள்
அங்கு போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும்முறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில், ரெனீ குட் (Renee Good) என்ற அமெரிக்கப் பெண்மணி ஒருவரும் குடிவரவு அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அந்தச் சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.