கனடாவுடன் மீண்டும் மோதும் ட்ரம்ப்! 100% வரி எச்சரிக்கை..
கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
சீனப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைய கனடா ஒரு வழியாக (Drop-off port) இருப்பதை அவர் கடுமையாக எதிர்த்துள்ளார்.
சீனாவுடன் ஒப்பந்தம்
மின்சார வாகனங்கள் உட்பட பல்வேறு துறைகளில் கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அத்துடன் உலகப் பொருளாதார மன்றத்தில், வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக மார்க் கார்னி பேசியது ட்ரம்ப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே,ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் "51-வது மாநிலம்" என்றும், கார்னியை அதன் "ஆளுநர்" என்றும் தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார் இந்த நிலையில், அமெரிக்காவின் ந100% வரி நடைமுறைக்கு வந்தால், கனடாவின் ஏற்றுமதித் துறை பெரும் சரிவைச் சந்திக்கும்.
அத்துடன் அது வட அமெரிக்க நாடுகளுக்கு இடையே ஒரு மிகப்பெரிய 'வர்த்தகப் போருக்கு' (Trade War) வழிவகுக்கும்.