மன்னாரில் நடக்கும் அவலங்கள்! இதுவரை வெளிவராத உண்மைகள்..
இந்தியாவிற்கு அண்மையில் இருக்கும் மன்னாரில் இயற்கையான கனிமவளங்கள் ததும்பி வழியும் நிலையில் உலக நாடுகளும் அவற்றை பிரதிபலிக்கும் நிறுவனங்களின் பார்வை விழுந்துள்ளது.
அந்தவகையில் அண்மையநாட்களாக மன்னார் காற்றாலை விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
காற்றாலை ஏற்கனவே அமைக்கப்பட்ட இடங்களில் கரைவலை மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரில் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளது. காற்றாலை அமைக்கப்பட்ட இடங்களில் உள்ள பனைமரங்கள் கருகுகின்றன. மழைவெள்ளநீர் கடலைசென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
என மன்னாரிலுள்ள மக்கள் தங்கள் கிராமம் அழிவின் விளிம்பில் உள்ளதோ என்ற அச்சத்தில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது உள்ளனர்.
இந்தநிலையில் , அரசியல்வாதிகளின் கபடநாடகங்களுக்குள் சிக்கிக்கொண்டதா மன்னார்? ஏன் இந்த திட்டத்திற்கு மன்னார் மக்கள் தங்களது காட்டமான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றார்கள் என்ற பதிலை நோக்கி புறப்பட்டது ஐபிசி தமிழ்...
அந்தவகையில், மன்னாரின் நிலைமைகளை மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர், இதன் முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
