தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சியை அங்கீகரிக்க தயார்: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு

Mannar Sri Lanka Sri Lankan political crisis
By Ashik May 11, 2024 05:59 PM GMT
Report

தமிழ் தேசிய பரப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எந்த கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தாலும், அவர்களுக்கான சம அங்கீகாரம் கொடுத்து தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை செயல்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என கிழக்கு மாகாண ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (Govinthan Karunakaran) தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ். ஆர். குமரேஸ் தலைமையில் மன்னாரில் மாவட்ட குழு அமைக்கும் நடவடிக்கை இன்று (11.05.2024) இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையில் விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் : குழப்பத்தில் வெளிநாட்டு பயணிகள்

இலங்கையில் விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் : குழப்பத்தில் வெளிநாட்டு பயணிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 2001 ஆம் ஆண்டு முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த போராட்ட இயக்கங்கள், மதவாத கட்சிகள் எல்லாம் இணைந்து ஒன்றிணைந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய காலத்தில் இருந்து இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பல கட்சிகள் வெளியேறியதுடன் சில கட்சிகள் உள்ளே நுழைந்தார்கள். எப்படி இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டு வந்தது.

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சியை அங்கீகரிக்க தயார்: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு | Mannar Press Meet Govindan Karunakaram

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழரசுக்கட்சி வெளியேறியதை தொடர்ந்து மீதமிருந்த தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தமிழ் மக்கள் விடுதலைக்கழகம்(புளொட்), ஆகியவை இணைந்து ஏற்கனவே வெளியேறிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபி.ஆர்.எல்.எப்), ஜனநாயக போராளிகள் கட்சி ,மற்றும் தமிழ் தேசிய கட்சி உட்பட ஐந்து கட்சிகளும் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாங்கள் இன்று வரை செயல்பட்டு வருகிறோம்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பது தேர்தல் திணைக்களத்தில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சியை அங்கீகரிக்க தயார்: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு | Mannar Press Meet Govindan Karunakaram

கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயங்குவதைப் போல் அல்லாமல் தற்போதைய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயரில் ஒரு கட்டமைப்புடன் நாங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒரு நிறைவேற்றுக் குழு இருக்கிறது. நிறைவேற்றுக் குழு எடுக்கின்ற முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும் வேளையில் தற்போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயல்பாடுகளை மாவட்ட ரீதியாக நாங்கள் விஸ்தரித்து கொண்டு வருகிறோம்.

ஒவ்வொரு மாவட்டமாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மாவட்ட கிளைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சியை அங்கீகரிக்க தயார்: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு | Mannar Press Meet Govindan Karunakaram

அதற்கமைவாக யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் மாவட்டக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (11) மன்னாரில் மாவட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் மாவட்ட குழுவை உருவாக்கி மிக விரைவில் இந்த மாவட்ட குழுக்களின் சம்மேளனத்தை நாங்கள் கூட்டி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயல்பாடுகளை தொகுதி, பிரதேச மற்றும் வட்டார ரீதியாக உருவாக்கி, தமிழ் மக்களுக்கு உரித்தான எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒரு கட்டமைப்பு இருப்பதுடன் இணைத் தலைவர்கள் தேவையான பதவிகள் மற்றும் அதற்கான யாப்பும் உள்ளது.

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சியை அங்கீகரிக்க தயார்: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு | Mannar Press Meet Govindan Karunakaram

குறித்த யாப்பின் அடிப்படையில் தமிழ் தேசிய பரப்பில் செயல்படும் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தாலும் அவர்களுக்கான சம அங்கிகாரத்தை கொடுத்து தொடர்ச்சியாக இந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை செயல்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் ஐந்து இலங்கையர்கள் கைது

ஐரோப்பாவில் ஐந்து இலங்கையர்கள் கைது

2024ஆம் ஆண்டு வரும் பேராபத்துகள் குறித்து கணித்துள்ள பாபா வங்கா

2024ஆம் ஆண்டு வரும் பேராபத்துகள் குறித்து கணித்துள்ள பாபா வங்கா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US