ஐரோப்பாவில் ஐந்து இலங்கையர்கள் கைது
லட்வியாவில், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவியதற்காக ஐந்து இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கைது நடவடிக்கை கடந்த மே 8 ஆம் திகதி இடம்பெற்றள்ளது.
Augšdaugava மாநகர சபையின், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இலங்கையர் ஒருவரினால் செலுத்திய வோக்ஸ்வேகன் போலோ (Peugeot) 307 ரக வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.
இலங்கை பிரஜைகள்
இதன்போது, வாகனத்திலிருந்த இலங்கையர் இருவரிடமும் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.
எனினும், அவர்கள் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்ற விசா அல்லது வதிவிட அனுமதிப்பத்திரம் இல்லாத ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஐந்து பேர் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, தெரிந்தே ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் லாத்வியா குடியேற சந்தர்ப்பம் வழங்கியமைக்காக இந்த இலங்கை பிரஜைகளுக்கு எதிராக குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்குரிய தண்டனையில் 2 முதல் 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |