யோஷித ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “சதி” என்ற குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியாது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இன்று(03.07.2026) குறித்த மனுவானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனுவைப் பரிசீலித்த பின்னர்

நீதிபதிகள் அமல் ரணராஜா மற்றும் சுமுடு பிரேமச்சந்திரா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, அந்த வழக்கை எதிர்த்து யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த சீராய்வு மனுவைப் பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு