பௌர்ணமி தினத்தில் பக்தர்களின் மோசமான செயல் - ஏற்பட்டுள்ள பெரும் அசௌகரியம்
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தொடருந்துகளில் பெருமளவிலான குப்பைகளை பொதுமக்கள் விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணத்தின் போது, விகாரைகளில் வழங்கப்பட்ட ஏராளமான உணவு மற்றும் பானங்கள் உண்ணப்படாமல் தொடருந்து பெட்டிகளிலேயே விட்டுச்சென்றுள்ளனர்.
பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
இதன் காரணமாக தொடருந்து பெட்டிகளில் பெருமளவு குப்பைகள், பழுதடைந்த உணவுகள் குவிந்து பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களுக்காக விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க இலங்கை தொடருந்து திணைக்களம் தீர்மானித்திருந்தது.
கடந்த மாதம் 29ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக தற்போது இயக்கப்படும் தொடருந்துகளுக்கு மேலதிகமாக, விசேட தொடருந்துகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கமைய, 2026/06/27ஆம் திகதி முதல் 2026/06/30ஆம் திகதி வரை இந்த தொடருந்துகள் சேவைகள் ஈடுபட்டிருந்தன.
இதற்கு மேலதிகமாக, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.