2024ஆம் ஆண்டு வரும் பேராபத்துகள் குறித்து கணித்துள்ள பாபா வங்கா
2024ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பல்வேறு வகையான அசௌகரியங்களை 1996இல் தனது 85 வயதில் காலமாவதற்கு முன் பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா (Baba Vanga) கணித்துள்ளமை பலரது கவனத்தை ஈர்த்து வந்துள்ளது.
பாபாவின் கணிப்புகளில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11இல் அமெரிக்காவில் (America) நடந்த உலக வர்த்தக மைய பயங்கரவாத தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவை உள்ளடங்குகிறது.
உலக வெப்ப அலை
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு பற்றியும் இவர் சில கணிப்புகளைச் கணித்து வைத்துள்ளார். இதன்படி 2024இல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்.
தற்போது உலக வெப்ப அலைகளின் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவியல் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. இந்த வெப்ப அலைகளின்போது உச்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது.
மேலும்,1996இல் பாபா வங்கா இறந்தபோது, இணைய வலையமைப்பு அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்துள்ள நிலையில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதோடு முக்கியமான உள்கட்டமைப்பு மீதான இந்த தாக்குதல்கள் சர்வதேச பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எனக் கணித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
உலகப் பொருளாதார சக்தியின் கட்டமைப்பு மாறும் என்றும் உலக நாடுகளிடையே அரசியல் பதட்டங்களும் கடன் சுமைகளும் அதிகரிக்கும் என்று வங்கா கணித்துள்ளதுடன் இவை அனைத்தும் 2024இல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கனவே பணவீக்கத்தின் பிடியில் இருப்பதாக அமெரிக்க கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
இதில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வரவுள்ளதாக எச்சரித்துள்ள வங்கா, ஒரு பெரிய உலக நாடு உயிரியல் ஆயுதங்களை சோதிக்கும் அல்லது பயன்படுத்தும் என மறைமுகமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஆகியவை தற்போது முக்கிய உலக நடப்புக்களாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
