ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள மாதங்களில் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அரசியல்வாதிகளை அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றின் மூலம் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளது.
பிரச்சார நடவடிக்கைகள்
பிரதேச செயலக மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் பெயரில் அரசியல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடும் என பெப்ரல் (paffrel) அமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
மேலும், பிரசார நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு சார்பானதாக அமைந்துவிடும் எனவும் குறித்த அமைப்பு கூறியிருந்தது.
இதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
