மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (Photos)

Mannar Northern Province of Sri Lanka
By Ashik Dec 29, 2023 06:19 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றைய தினம்(29.12.2023) நடைபெற்றுள்ளது.

யாழில் முதியவர் ஒருவருக்கு வைத்தியசாலையில் நேர்ந்த கொடுமை

யாழில் முதியவர் ஒருவருக்கு வைத்தியசாலையில் நேர்ந்த கொடுமை

சட்ட விரோத காணி அபகரிப்பு

இந்நிலையில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் அமைத்து வருகின்றமை மற்றும் சட்ட விரோதமாக காணிகள் அபகரிப்பு, சட்ட விரோத மரம் வெட்டப்படுகின்றமை குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (Photos) | Mannar District Coordination Committee Meeting

மேலும், நானாட்டான் பிரதேச கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, நானாட்டான் புல்லறுத்தான் கண்டல் பிரதேசத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் பயிர்ச்செய்கை செய்து வருபவர்களை உடனடியாக வெளியேற்றி அக்காணிகளை மேய்ச்சல் தரவைக்கு கையளிக்க உரிய அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் ஏற்கனவே பணித்திருந்தார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (Photos) | Mannar District Coordination Committee Meeting

எனினும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த காணி சரணாலயமாக பிரகடனப் படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குறித்த பிரதேசம் தொடர்பாக சகல ஆவணங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வனவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் முதியவர் ஒருவருக்கு வைத்தியசாலையில் நேர்ந்த கொடுமை

யாழில் முதியவர் ஒருவருக்கு வைத்தியசாலையில் நேர்ந்த கொடுமை

தேசிய ஆணைக்குழு

காணி இல்லாதவர்களுக்கு வன வளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து காணிகளை விடுவித்து பகிர்ந்தளித்தல் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பான விபரங்கள் தேசிய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (Photos) | Mannar District Coordination Committee Meeting

வர்த்தமானி அறிவித்தல் வெளியானவுடன் ஏனைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதோடு வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஷ்ட ஈடு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம்,கே.திலீபன், திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற அமைப்புகள், இராணுவம், பொலிஸ், கடற்படை உயரதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

விடுதி அறையில் மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியர் கைது

விடுதி அறையில் மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியர் கைது

மர்மமாக உயிரிழந்த இளம் தாதி: பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் உடல் அடக்கம்

மர்மமாக உயிரிழந்த இளம் தாதி: பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் உடல் அடக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US