இந்தப் பெண் யார்? - பொதுமக்களின் உதவி நாடும் வெளிவிவகார அமைச்சு
லெபனானில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து உயிரிழந்த இலங்கைப் பெண்ணை அடையாளம் காண உதவி கோரப்பட்டுள்ளது.
உயிரிழந்த இலங்கைப் பெண் ஒருவரின் உண்மையான அடையாளத்தைக் கண்டறிய பொதுமக்களின் உதவியை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கோரியுள்ளது.
லெபனானில் வழ்ந்து வந்த இந்தப் பெண் “ராணி ஸ்ரீ லங்கி” என்ற பெயரால் அறியப்பட்டுள்ளதாக அமைச்சின் பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் குடும்பத்தினரைக் கண்டறியவோ அல்லது இவரது உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்தவோ உதவும் தகவல்களை உடையவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பத்தரமுல்லை, 'சுஹூருபாய' கட்டிடத்தின் 16வது மாடியில் அமைந்துள்ள அமைச்சின் konsular விவகாரப் பிரிவிற்கு தகவல்களை வழங்க முடியும் அலல்து +94 11 227 5525 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கா தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் உரிய தகவல்களை வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதுடன், பெறப்படும் அனைத்துத் தகவல்களும் மிகக் கடுமையான இரகசியத்தன்மையுடன் பேணப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam