ஞானசார தேரர் விவகாரத்தில் ஐக்கிய தேசியகட்சியின் அறிக்கைக்கு நீதி அமைச்சர் பதிலடி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் ஆடை விவகாரம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கைக்கு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று(15) எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
இணை எதிர்க்கட்சியின் அமைப்பாளர் ஜி.எல். பீரிஸின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, ஐக்கிய தேசியக் கட்சி நேற்று(14) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த பிக்குகள் மற்றும் மத தலைவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது அவர்கள் அணிய வேண்டிய உடைகள் தொடர்பாக, சிறைச்சாலைத் திணைக்களத்தின் நிலையியற் கட்டளைகளில் (Prisons Standing Orders) ஏற்கனவே தெளிவான விதிகள் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தமது அறிக்கையில் வாதிட்டுள்ளது.
நேர்மையற்ற முயற்சி
இந்த விவகாரம் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக குழு ஒன்றை அமைப்பது, பிரச்சனையை மூடிமறைப்பதற்கும் தாமதப்படுத்துவதற்குமான ஒரு நேர்மையற்ற முயற்சி என்று அந்தக் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
அத்துடன், ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டது தொடர்பாக, மல்வத்து மற்றும் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் மற்றும் சங்க சபாவிடம் அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சியானது, பொதுமக்களை "தவறாக வழிநடத்தும்" வகையில் சட்டத்தை சிதைத்துக் காட்டுவதற்காக சிறைச்சாலை நிலையியற் கட்டளை இலக்கம் 550-ன் ஒரு பகுதியை மட்டுமே "வேண்டுமென்றே" மேற்கோள் காட்டியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறையில் இருக்கும் ஒரு பௌத்த பிக்கு தொடர்பான உணர்வுப்பூர்வமான சமூகப் பிரச்சினையில், ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி இவ்வாறான தவறான கருத்துக்களைப் பரப்புவது மிகவும் வருந்தத்தக்கது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தைப் பற்றி குறைந்தபட்ச புரிதல் கொண்ட எவரும், ஒரு சட்ட விதியின் ஒரு சிறு பகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கருத்து வெளியிடுவது தவறான புரிதலுக்கே வழிவகுக்கும் என்பதை அறிவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்,பொதுமக்களுக்கு தவறான பிம்பத்தை உருவாக்கப்படுள்ளது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri