யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் : பிரதமர் அமைச்சரவை உயிர் தப்பினர்
யேமன் நாட்டின் ஏடன் நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தில், நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உயிர் தப்பியதாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பலத்த வெடிப்புச் சத்தங்கள்
ஏடன் நகரில் உள்ள அல்-மாஷிக் ஜனாதிபதி மாளிகையை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் 5 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக யேமன் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் முஅம்மர் அல்-இர்யானி தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடக நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக யேமன் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகள்! பொலிஸாரோடு முறுகல்நிலை - களத்தில் கடும் பதற்றம்