பிக்குகளின் ஆடைகளின் மீது கை வைக்காதீர்! காலி முகத்திடல் பதற்ற நிலையை அடுத்து வெளியான எச்சரிக்கை

Colombo Galle Face Protest Sajith Premadasa Galagoda Aththe Gnanasara Thero
By Benat Oct 15, 2026 05:13 PM GMT
Report

கொழும்பு -  காலி முகத்திடலில் அமைந்துள்ள  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளுக்கு எதிராக பொலிஸார் தற்போது மேற்கொண்ட நடவடிக்கை பெரும் மனவேதனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலைச் செய்யக் கோரி நடத்தப்பட்டுவரும் இந்தப் போராட்டத்தின் போது, பௌத்த பிக்குகள் கூடாரம் ஒன்றை அமைக்க முற்பட்ட நிலையில், பொலிஸார் அதனை அகற்ற முற்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக, ஜனாதிபதி செயலக வளாகத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பதற்ற நிலை

இந்த நிலையில், இது குறித்து தனது முகநூல் தளத்தில் இட்டுள்ள பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொலிஸாரின் செயற்பாட்டிற்கு எதிராக கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

“கண்டி முதல் கொழும்பு வரை பாதயாத்திரையாக வந்த பிக்குகள், ஜனாதிபதி செயலகத்தில் அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன்போது, பிக்குகள் கொண்டு வந்த புத்தர் சிலையைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரத்தினை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

இதன் காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சம்பவத்தின் போது சிலர் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

மகா சங்கத்தினருடன் ஜனாதிபதி நேரடியாகப் பேசி, பௌத்த பிக்குகளின் உடையின் புனிதத்தன்மைக்கு மதிப்பளித்து அவர்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

பிக்குகளின் உடைகளின் மீது கை வைக்க அனுமதிக்க முடியாது. பௌத்த பிக்குகளுக்கு தொல்லை அல்லது மனவேதனை அளிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் அரசாங்கமும் பொலிஸாரும் உடனடியாக நிறுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகள்! பொலிஸாரோடு முறுகல்நிலை - களத்தில் கடும் பதற்றம்

ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகள்! பொலிஸாரோடு முறுகல்நிலை - களத்தில் கடும் பதற்றம்

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US