பல்லாயிரம் கோடிகளை குப்பையில் தொலைத்த பிரித்தானியர்! 12 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய திருப்பம்
பிரித்தானியர் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தவறுதலாக குப்பையில் வீசிய, பிட் கொய்ன்(Bitcoin) சேமிப்பு அடங்கிய வன் தட்டு(Hard Drive) கண்டுபிடிக்கப்பட்டால், அது நகரசபைக்கே சொந்தமாகும் என வேல்ஸிற்கான சர்க்யூட் வணிக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2012ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹொவெல்ஸ், தற்போதைய மதிப்பில் 600 மில்லியன் பவுண்ஸ் மதிப்பிலான பிட் கொய்ன் தொகுப்பை கொள்வனவு செய்திருந்தார்.
அந்த சமயத்தில் பிட் கொய்ன் என்பது பிரபலம் இல்லது இருந்ததால் அவர் அந்த தொகுப்பை இலவசமாக மைனிங் முறையில் கொள்வனவு செய்திருந்தார்.
எனினும், தற்போது அதன் மதிப்பு இலங்கை ரூபாவின் படி, 63,139,020,000(6,000 கோடிக்கு மேல்) ரூபா ஆகும். எவ்வாறாயினும் அவர் குறித்த பிட் கொய்ன் தொகுப்பு அடங்கிய வன் தட்டை தவறுதலாக குப்பையில் வீசியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
இதனையடுத்து, கிரிப்டோ(Crypro) சந்தை மிக வேகமாக வளர்ச்சியடைந்து பிட் கொய்னின் பெறுமதியும் அதிகரித்தது. இதனால், 10 வருடங்களாக, தான் தொலைத்த வன் தட்டை ஜேம்ஸ் ஹொவெல்ஸ் தேடி வருகின்றார்.
இந்நிலையில், வன் தட்டை தேடுவதற்கு நகரசபையின் உதவியை கோரி ஹொவெல்ஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், குறித்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஹோவெல்ஸிடம் இந்தக் கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்றும், வழக்கு விசாரணைக்கு வந்தால் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மன வேதனையில் ஹொவெல்ஸ்
மேலும், இந்த வன் தட்டு கண்டுபிடிக்கப்பட்டால் அது தமக்கே சொந்தம் எனக் கூறும் நகர சபையின் வாதத்தையும் நீதிமன்றம் நியாயப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவ்வாறானதொரு தீர்ப்பை தான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறிய ஹொவெல்ஸ், கடந்த 10 ஆண்டுகளாக தனது தொடர்ச்சியான முயற்சியை இது களங்கப்படுத்தியுள்ளதாகவும் மிகுந்த மன வேதனையுடன் கூறியுள்ளார்.
முன்னதாக, பிட் கொய்ன் மீளப்பெறப்பட்டால் அதில் 25 சதவீதத்தை நகரசபைக்கு வழங்குவதாக ஹொவெல்ஸ் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |