ட்ரம்ப் - ஒபாமா உள்ளிட்ட ஐந்து முன்னாள் ஜனாதிபதிகள் ஒரே மேடையில் சங்கமம்
அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் அந்நாட்டின் தற்போதைய மற்றும் முன்னாள், ஜனாதிபதிகள் ஐந்து பேரும், பங்கேற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
வொஷிங்டன் தேசிய பேராலயத்தில் நடைபெற்ற அரசு இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ஜோ பைடன் ஜிம்மி கார்ட்டருக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.
இதன்படி, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், பிற முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பில் கிளிண்டன் மற்றும், ஜோ பைடன் ஆகியோர் ஒரே மேடையில் சந்தித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி
மேலும், கடந்த நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப், மற்றும் கமலா ஹரிஸ் இருவரும் பொது நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டமை இதுவே முதல் தடவை ஆகும்.
2018இல் ஜோர்ஜ் டபிள்யூ. புஷின் தந்தையின் இறுதி நிகழ்வின் பின்னர் ஐந்து ஜனாதிபதிகளும் ஒன்றாக நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளமையும் இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |