ஆடையின்றி உந்துருளியில் பயணித்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்
ஆடையின்றி உந்துருளியை ஓட்டிச்சென்றமை காரணமாக கைது செய்யப்பட்ட இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கன்டறியப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனை தெரிவித்துள்ளார். அவர் தலைக்கவசம் இல்லாமல் நுகேகொடையிலிருந்தே ஆடையின்றி வந்தாரா என்பது விசாரணைகளுக்குப் பிறகுதான் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, குறித்த இளைஞர், கடந்த திங்கட்கிழமையன்று, ஆடையின்றி உந்துருளியில் பயணித்த போது, கடுகன்னாவ பொலிஸாரால் கைது செய்யப்படார்.
விசாரணை
இதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் பொலிஸார் அவரை கைது செய்ய முயன்ற போது, அது பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணையின் போது, தம்மை சுதந்திரமாக இருக்க விரும்பியதாகவும், பீதுருதாலகல மலையை நோக்கி பயணித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam
