அரச அலுவலகத்திற்குள் திடீரென புகுந்த மர்ம நபரின் அட்டகாசம்! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்
அம்பாந்தோட்டையில் உள்ள அரச அலுவலகமொன்றுக்குள் திடீரென நுழைந்த நபரொருவர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்கள் எங்கும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த அலுவலகத்திற்குள் நுழையும் நபர், அங்கிருந்த ஒரு கதிரையை எடுத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது அங்கிருந்த அரச ஊழியர்கள் கடும் பயத்துடன் அலறியடித்துக் கொண்டு ஓடுவது போன்ற ஒரு காணொளி வெளியாகியுள்ளது.
யார் என்றும், எதற்காக இவற்றை செய்கின்றீர்கள் எனக் கேட்டு முன்வரும் ஊழியர்களையும் அந்த நபர் தாக்க முற்படுகின்றார்.
எனினும், ஏன், எதற்காக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது மற்றும் இதன் பின்னணி மற்றும் சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam