தமிழர் பகுதியில் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்ட இளைஞன்! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
முல்லைத்தீவு- முத்தையன் கட்டில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞன் ஒருவர் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முத்தையன் கட்டு முத்து விநாயகர் புரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்ட போது காதல் பிரச்சினை காரணமாக இந்த வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு ஒட்டுசுட்டானைச் சேர்ந்த யுவதி ஒருவரும் அவரது அண்ணனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



