குடும்பஸ்தரின் உயிரை பறித்த தூரியன்
எஹெலியகொட, பரகடுவ பகுதியில், நபர் ஒருவரின் தொண்டையில் தூரியன் விதை சிக்கி உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 86 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆரியதாச வீரசிங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரம்புட்டான் விதை
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஹரிந்திர லக்மினா தென்னகோன் என்பவரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாட்சியமளித்த உயிரிழந்தவரின் மனைவி, தனது கணவரின் தொண்டையில் சிரமம் ஏற்பட்டதாகவும், என்ன நடந்தது என்று கேட்ட போது, ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதாக அவர் கூறினார்.

அவர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மனைவி தெரிவித்தார்.
எனினும் பிரேத பரிசோதனையில் தூரியன் விதை தொண்டையில் சிக்கியதால் மரணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri