காலியில் லிஃப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
காலி பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள ஒரு கட்டிடத்தின் லிஃப்ட் இடிந்து விழுந்ததில், அங்கு பணிபுரிந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் அக்மீமனவைச் சேர்ந்த 29 வயதுடையவர் என்றும், அவர் நிறுவனத்தின் உதவி மேலாளராகப் பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்த இளைஞர் தரை தளத்தில் இருந்ததாகவும், தரை தளத்திலிருந்து மூன்றாவது மாடிக்கு பொருட்களை எடுத்துச் செல்லும்போது, லிஃப்ட் மூன்றாவது மாடியில் இருந்து அவரது தலையில் விழுந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
