திருகோணமலையில் குரங்கு தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - தம்பலகாமம் அரபா நகரில் பள்ளிவாசலில் கடமை புரியும் பணியாளர் (முஅத்தின்) ஒருவர் குரங்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று (2.1.2026) இடம்பெற்றுள்ளது.
குரங்கு தாக்குதல்
பள்ளியில் தூங்கி கொண்டிருந்த போது குறித்த நபர், குரங்கால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான நபர், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பள்ளி நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பகுதியில் ஓரிரு நாட்களுக்கு முன்னர், இதே குரங்கால் அந்த பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளான்.
குரங்குகளின் அட்டகாசம் குறித்து, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான தாக்குதல் காரணமாக அப்பகுதிக்கு சென்று மதக் கடமைகளையும் நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும், நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri