வேகமாக இலங்கையை நெருங்கும் காற்றழுத்தம்.. உயர்வடையும் கடல் அலைகள்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Department of Meteorology
By Sajithra Jan 08, 2026 10:06 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக அறிவித்துள்ளது. 

இது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (09) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இலங்கை கடற்கரையை ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே கடக்கும் வாய்ப்பு அதிகம் என முன்னர் தெரிவிக்கப்பட்டது. 

தற்போது, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.5 – 3.5 மீட்டர் வரை எழும்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தக் கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், பின்னர் குறித்த கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

வேகமாக இலங்கையை நெருங்கும் காற்றழுத்தம்.. உயர்வடையும் கடல் அலைகள் | Deep Depression 300 Km From Pottuvil

இரண்டாம் இணைப்பு 

நாளை (09) பிற்பகல் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை பகுதிகளிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு நிலை நாட்டை நோக்கி உள்நுழையக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

பாதகமான வானிலை குறித்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தற்போது நாட்டின் கிழக்கு கடற்கரையில் பொத்துவில் பகுதியிலிருந்து தென்கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை ஹம்பாந்தோட்டைக்கும் கல்முனைக்கும் இடையில் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக கருணாநாயக்க தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு 

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (08) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.

இது தற்போது பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த சில மணி நேரத்தில் கிழக்கு கடற்கரையை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அவதானமாக இருங்கள்! யாழ். உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை

அவதானமாக இருங்கள்! யாழ். உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை

இடைவிடாத மழை

இதன் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைவிடாத மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமாக இலங்கையை நெருங்கும் காற்றழுத்தம்.. உயர்வடையும் கடல் அலைகள் | Deep Depression 300 Km From Pottuvil

இதற்கிடையில், நாடு முழுவதும் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் மெரில் மெண்டிஸ் கூறினார்.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். 

இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் - சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு

இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் - சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு

இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் - சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு

இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் - சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US