மதுரோவை சிறைபிடிக்க அமெரிக்கா ஆடிய ஆட்டம் - மறைக்கப்பட்ட பலி எண்ணிக்கை
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய அமெரிக்கா தலைமையிலான விமானப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெனிசுலா நாட்டின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் (7) புதன்கிழமை இரவு தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு
அமெரிக்கா தலைமையிலான விமானப்படை நடத்திய தாக்குதலில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதே எண்ணிக்கையிலானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலுடன் எந்த தொடர்பும் இல்லாத வீடுகளில் இருந்த பொதுமக்களும், பெண்களும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகளினால் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இருப்பினும், தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னர் கூறியிருந்த நிலையில், தாக்குதலின் போது ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பல அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.