வெள்ளவத்தை உட்பட கொழும்பின் புறநகர் பகுதிகளில் திடீரென நீர்விநியோகம் பாதிப்பு
கொழும்பின் சில பகுதிகள் உட்பட அதன் புறநகர பகுதிகளில் நீர் விநியோகம் திடீரென தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலேயில் இருந்து பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மொரட்டுவை, ராவட்டவத்த, சொய்சாபுர, இரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவை ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைபடும்.
நீர் விநியோகம்
இதேவேளை, நீர் விநியோகம் தடைப்படும் நேரத்தில் பத்தரமுல்லையில் உள்ள நுகர்வோர் குறைந்த நீர் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

கோளாறினை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீர் விநியோகக் குழாயை முழுமையாக சீர்செய்யும் வரை கிடைக்கும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை பொதுமக்களை கேட்டுள்ளது.
இன்று நள்ளிரவுக்குள் நீர் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri