3 நிமிடங்களில் இரத்த மாதிரி பரிசோதனை முடிவு! சாரதிகளுக்கு இன்று முதல் கடுமையாகும் சட்டம்
மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத பிற போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக இன்று (08) முதல் சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வாகன சாரதிகளுக்கு சிக்கல்
பிற போதைப்பொருட்களை உட்கொள்பவர்கள் குறித்து ஆய்வகத்தில் நடத்தப்படும் இரத்த மாதிரி சோதனை மூலம் 3 நிமிடங்களில் 12 மருந்துகளுக்கான முடிவுகளை பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கமைய, பரிசோதனை முடிவுகளை அச்சிட்டு சாரதிகளுக்கு வழங்கலாம் என்றும், இதற்கு எதிராக வழக்கு தொடரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.