பணி முடிந்து வீடு திரும்பிய குடும்பஸ்தர் காட்டு யானை தாக்கிப் பரிதாப மரணம்
அனுராதபுரம், மதவாச்சிப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானை ஒன்று தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர், நேற்று மாலை தனது பணியை முடித்துக்கொண்டு, வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது, வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று, திடீரென அந்த நபரை நோக்கி ஓடிவந்து முறையில் தாக்கியுள்ளது.
மக்கள் கோரிக்கை
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, பலத்த காயமடைந்த நிலையில் அந்தப் பகுதிக்குள்ளேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொலிஸாரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதவாச்சி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.