குழந்தைகளுக்கு 24 மணிநேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால்..! வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
குழந்தைகளுக்கு 24 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அவசர எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரதீப் ரத்னசேகர விடுத்துள்ள அறிவிப்பில்,
பெற்றோர் தமது குழந்தைகளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும்போது அவர்களின் மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தவறாமல் கொண்டு செல்ல வேண்டும்.
சரியான மருத்துவ ஆலோசனை
வீட்டு வைத்தியம் செய்வதால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான முக்கியமான நேரம் வீணாகிறது. உடனடியாக சரியான மருத்துவ ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் உள்ளனர். இந்த நிலைமை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலையில் நெருக்கடி தீவிரமடைய சாத்தியமுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO