அதிகரிக்கும் டெங்கு பரவல் : 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்

Dengue Prevalence in Sri Lanka Hospitals in Sri Lanka Death
By Rakesh Jul 27, 2026 02:45 AM GMT
Report

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது.

நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு இரகசிய பயணம் மேற்கொண்ட நாமல் - அதிமுக்கிய அரசியல்வாதிகளுடன் சந்திப்பு

இந்தியாவுக்கு இரகசிய பயணம் மேற்கொண்ட நாமல் - அதிமுக்கிய அரசியல்வாதிகளுடன் சந்திப்பு

அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் 

நாடு முழுவதும் இவ்வருடம் இதுவரை 81 ஆயிரத்து 511 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 61 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.

அதிகரிக்கும் டெங்கு பரவல் : 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் | Dengue Outbreak Increasing Patients 81 Thousand

கடந்த ஜூன் மாதம் 21 ஆயிரத்து 537 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இம்மாதத்தில் கடந்த 25 நாள்களில் மாத்திரம் 26 ஆயிரத்து 136 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மாகாணங்கள் வாரியாகப் பார்க்கும்போது, மேல் மாகாணத்தில் 43 ஆயிரத்து 132 (52.92 சதவீதம்) நோயாளர்களும், தென் மாகாணத்தில் 12 ஆயிரத்து 329 (15.13 சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா (17,280), கொழும்பு (16,213), மாத்தறை (5,608), கண்டி (5,581), களுத்துறை (5,335), இரத்தினபுரி (4,551), காலி (4,499), குருநாகல் (2,265) உள்ளிட்ட மாவட்டங்களிலும், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் (3,315) தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் நாள்களில் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வைத்திய நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு

இரண்டு நாள்களுக்கு மேல் நீடித்த காய்ச்சல் தென்படுமாயின் உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகி வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும்.

அதிகரிக்கும் டெங்கு பரவல் : 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் | Dengue Outbreak Increasing Patients 81 Thousand

மேலும், குழந்தைகளுக்கு 24 மணித்தியாளங்கள் காய்ச்சல் தென்படுமாயின் தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்போடு, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினரால் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகையால், பொதுமக்கள் இந்நாள்களில் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து, சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பளிக்காது தூய்மையாகப் பேணுவதோடு, நோய் பரவல் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர் ஹசித நிரோசனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல

ஆளும் கட்சி உறுப்பினர் ஹசித நிரோசனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல

ஜனாதிபதி மாளிகையின் பயன்பாடு குறித்து வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதி மாளிகையின் பயன்பாடு குறித்து வெளியான முக்கிய தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US