2 கோடி ரூபா மோசடி வழக்கு- முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார மகனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டார உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(27.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள்- இறக்குமதியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பிணையில் செல்ல அனுமதி
பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள், இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீதிபதி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 500,000 ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதோடு, வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பண்டார உட்பட இந்தக் குழுவினர் கடந்த ஜூலை 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.