மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் - வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கியினால் வாகனங்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் கடன் வசதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களால், வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகனக் கடன்கள் மற்றும் குத்தகை வசதிகள் மீது இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் நேற்று (25) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் வழங்கும் வரம்புகள்
புதிய உத்தரவின்படி, பல்வேறு வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் வழங்கும் வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மோட்டார் கார்கள், எஸ்யூவி (SUV) ரக வாகனங்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் (Three-wheelers) மற்றும் இதர வாகனங்களுக்கான நிதியளிப்பு வரம்பு 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான கடன் வரம்பு 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லொரிகள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட 70 சதவீத கடன் வசதி, புதிய திருத்தத்தின்படி 60 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான கடன் வசதிகள்
அதன்படி, வர்த்தக வாகனங்களுக்கான கடன் வசதிகள் 80 சதவீதமாகவும், கார்கள், எஸ்யூவிகள் மற்றும் வேன்களுக்கு 60 சதவீதமாகவும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 50 சதவீதமாகவும், பிற வாகனங்களுக்கு 70 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளன.

அதன்படி, வர்த்தக வாகனங்களுக்கான கடன் வசதி 90 சதவீதமாகத் திருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் அனைத்தும் இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படாத (Unregistered) வாகனங்களுக்கும், முதன்முறை பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆன வாகனங்களுக்கும் பொருந்தும் என மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்