சர்ச்சைக்கு மத்தியில் நீதிச் சேவை சங்கத் தலைவர் பசன் அமரசேன பதவி விலகல்
நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று(11.07.2026) நடைபெறவிருந்த நீதிச் சேவை சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டத்தை முன்னிட்டு ஏற்பட்ட சர்ச்சையே அவரது பதவி விலகலுக்குக் காரணம் என கூறப்படுகிறது.
வீடமைப்பு அதிகார சபை மீதான பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்! கோப் குழு விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
பதவி விலகல்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான விடயத்தை கலந்துரையாடவும், உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறவும் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று(11) விசேட பொதுச் சபை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், தனது பதவி விலகல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து சங்க உறுப்பினர்களுக்கு தலைவர் பசன் அமரசேன அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதனையடுத்து, தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சங்கத்தின் செயலாளர் நீதிபதி சுரங்க முனசிங்க அனுப்பியதாகக் கூறப்படும் மற்றுமொரு கடிதமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், திட்டமிட்டபடி நீதிச் சேவை சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஆரம்பமானதாகவும் தெரிவித்துள்ளார்.