கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு நுழைவு முனையத்திற்குள் துப்பாக்கியை எடுத்துச் சென்றவர் 41 வயது கோடீஸ்வர தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.
குறித்த தொழிலதிபர் தனது ஆயுதத்துடன் விமான நிலைய வருகை முனையத்திற்கு ஏன் சென்றார் என்பதைக் கண்டறிய, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரான தொழிலதிபர் பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் ஒரு வாகன விற்பனையாளர் ஆவார்.
வருகை முனையம்
அவர் பெரிய அளவிலான இரத்தினச் சுரங்கத் தொழிலையும் நடத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரின் நண்பர் விமானத்தில் சென்றதால் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு அவரை அழைத்துச் சென்றபோது பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டக்களுடன் முனையத்திற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற துப்பாக்கி
அது ஆயுதம் உரிமம் பெற்ற துப்பாக்கி என்ற போதிலும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர் பல அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரமுகர்கள் பொலிஸாரை தொடர்பு கொண்டு அவரைப் பற்றி விசாரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.