வவுனியாவில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது
வவுனியா - பெரியார்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று (04.02.2025) தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் குழுவினர் வவுனியா, பெரியார்குளம் பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 50 போதை மாத்திரைகள் இளைஞர் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், வவுனியா - பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri