வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தல்
சைபர் நிதி மோசடி கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர் ஒருவர் நாட்டிற்கு வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு, கைது செய்யப்பட்ட சீன நாட்டவரை நாட்டிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
28 வயதான அந்த நபர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
எல்லை கண்காணிப்புப் பிரிவு
அதிகளவிலான கணினி உபகரணங்களை எடுத்துச் சென்ற சீன நாட்டவரை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவு விசாரித்துள்ளது.
இலங்கை பங்குச் சந்தையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய தொழிலதிபரை சந்திக்க வந்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அவரது விசாரணையின் போது, சர்வதேச சைபர் நிதி மோசடி கும்பல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.




