சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட கைப்பேசிகளுடன் ஒருவர் கைது
புத்தளத்தில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்ல முற்பட்ட சுமார் 640 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வண்டியை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இனைந்து நேற்று (27) இரவு கரம்பை சோதனைச் சாவடியில் வைத்து சோதனைக்கு உற்படுத்தப்பட்டபோதே சுமார் 650 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரம்
குறித்த கையடக்கத் தொலைப்பேசிகள் இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு வரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியையும் நுரைச்சோலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 46 நிமிடங்கள் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
