கச்சதீவில் காப்பாற்றப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் துணை தூதரகத்தில் ஒப்படைப்பு
கச்சதீவுக்கு அண்மையில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் இன்றையதினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்றையதினம் தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு கடற்றொழிலாளர்களை மீட்டுள்ளனர்.
இரண்டு கடற்றொழிலாளர்கள்
அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் இருவரும் நேற்றையதினம் நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் இன்றையதினம் குமுதினி படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் நாளையதினம் பலாலி விமான நிலையமூடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண இந்திய துணை தூதரகம் முன்னெடுத்து வருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam