றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழா இடைநிறுத்தம்! நிர்வாகத்தினரின் முக்கிய அறிவிப்பு
கிளிநொச்சி- இயக்கச்சியில் உள்ள றீச்ஷா வளாகத்தில் கோலகலமாக இடம்பெற இருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
றீச்ஷாவில் ஓகஸ்ட் 7 முதல் 10 வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரம்மாண்டமான உணவுத் திருவிழா கோலகலமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்து.
இந்தநிலையிலே, தவிர்க்க முடியாத காரணத்தினால், இன்றையதினமும்(9) நாளையதினமும் (10) நடைபெறவிருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இடைநிறுத்தம்
அத்தோடு, இன்றையதினமும், நாளையதினமும் உணவுத்திருவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு செலுத்திய முழுத் தொகையும் நிகழ்நிலை வங்கி பரிமாற்றம் மூலம் மீளளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் நிர்வாகத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam