இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள எரிபொருள் விலை மீளாய்வின் போது, முழுச் சுமையையும் நாட்டின் எரிபொருள் நுகர்வோர் மீது சுமத்துவதற்குப் பதிலாக, அதற்கான செலவின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (23.09.2026) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலைகள் மீளாய்வு செய்யப்படுகிறது. உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்திருந்தாலும், அதன் முழுச் சுமையையும் நாட்டின் நுகர்வோர் மீது சுமத்த நாங்கள் விரும்பவில்லை.

ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அந்தச் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதை போலவே, இந்த மாத இறுதியிலும் எரிபொருள் விலைகளை மீளாய்வு செய்து அதற்கான தீர்வை எட்டவுள்ளோம்.
ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், எரிபொருள் நுகர்வோர் மீது முழுச் சுமையையும் சுமத்துவதற்குப் பதிலாக, செலவின் ஒரு பங்கை நாங்களே ஏற்றுக்கொள்வதே எங்கள் நோக்கமாகும் என்றார்.
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்