அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும் ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் குறைவதால் உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்கள் வறண்டுபோதல்
நிலவும் வறண்ட வானிலையின் காரணமாக, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வறண்டு போனதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களைப் பாதித்துள்ள கடுமையான வறண்ட வானிலையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உடல் வெப்பம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது.
இதன்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam