கட்டைக்காட்டில் சந்தேகத்திற்குரிய பெல்ட் ஹோல்டர் கண்டெடுப்பு - பொலிஸார் விசாரணை
மருதங்கேணி - கட்டைக்காடு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் முற்றத்தை சுத்தம் செய்த போது சந்தேகத்திற்குரிய பெல்ட் ஹோல்டர் (Belt Holder) ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (2026.08.08) மதியம் சுமார் 12:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் தனது வீட்டு முற்றத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த பெல்ட் ஹோல்டரைக் அவதானித்துள்ளார்.
இது குறித்து உடனடியாக மருதாங்ககேணி பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது.
சோதனை முன்னெடுப்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருதாங்ககேணி பொலிஸ் நிலைய பொலிஸார், மதியம் 1 மணியளவில் அப்பகுதியை பார்வையிட்டு, வெளிப்புறப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, அந்த பெல்ட் ஹோல்டருக்குள் சில பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னர், பெல்ட் ஹோல்டரை மீட்டு மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்த உள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan