ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட கட்சி பணியாளர் நியமனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட கட்சி பணியாளர் நியமனங்களை ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) அறிவித்துள்ளார்.
இதன்படி கண்டி மாவட்ட அமைப்பாளர் எம். விக்கினேஸ்வரன், மாவட்ட செயலாளர் குலேந்திரன் கணேசன், மாவட்ட பொருளாளர் எம். கிருஸ்ணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். கே. வினோத் ஆகியோர் கட்சி பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் எஸ். சசிகுமார், கண்டி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்.
இடம்பெற்ற நிகழ்வு
மேலும், கட்சியின் தென் கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பொ. ஜெயபாலன், பிரசார செயலாளர் பரணிதரன் முருகேசு ஆகியோருடன், நியமனங்களை பெற்றுகொண்டவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த மனோ கணேசன்,
"கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், நமது கட்சி போராடி பெற்றுக்கொண்ட கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கு உரிய கெளரவமாகும்.
இதை தனிப்பட்ட நபர்கள் எவரும் பறித்து உரிமை கொண்டாட முடியாது. அரசியல் வழி பாதையில் நாம் சந்தித்த எத்தனையோ சவால்களில் இது மிகவும் சிறிய ஒரு சம்பவமாகும்.
ஆனால், கண்டி மாவட்ட தமிழர்களின் தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்ட பிரதிநிதித்துவங்கள் என்பன விலை மதிக்க முடியாத கண்டி மாவட்ட மக்களின் உரிமை கோஷங்கள் ஆகும். இந்த கோஷங்களை நாம் தொடர்ந்து முன் கொண்டு செல்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam