ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு
நடைபெறவுளள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) போட்டியிடுவதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(28) நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வழக்கினை தாக்கல் செய்த நபர் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் குறிப்பிட்டதாக கூறி அவருக்கு 50 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை உரிமை மீறல்
குறிப்பாக பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை போன்ற காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு மனுதாரர் வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நியமனங்கள் வழங்கப்படாமைக்கு ஜனாதிபதியே காரணம் என்றும் எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு பொய்யாக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த மனு அரசியலமைப்பின் 92வது சரத்து மீறப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த ஆட்சேபனை மன்றில் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளமுடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |