கொழும்பில் பல பகுதிகளில் பெண்களை அச்சுறுத்தி வந்த நபர் அதிரடியாக கைது - சிக்கிய பெருந்தொகை தங்க நகைகள்

Sri Lanka Police Colombo
By Dhayani May 24, 2026 07:01 AM GMT
Report

கொழும்பில் பல பகுதிகளில் பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடித்து வந்த ஒருவர் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொள்ளைக்காகப் பயன்படுத்திய திருடப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்கப்பட்ட 18 தங்கச் சங்கிலிகள் மற்றும் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்த 17 கிராம் 800 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

போதைப்பொருள்  பாவனைக்கு அடிமை

பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய குறித்த சந்தேகநபர், கடுமையான 'ஐஸ்' போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பல பகுதிகளில் பெண்களை அச்சுறுத்தி வந்த நபர் அதிரடியாக கைது - சிக்கிய பெருந்தொகை தங்க நகைகள் | Man Arrested For Threatening Women In Colombo

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே ஆகிய பொலிஸ் பிரிவுகளில், ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள்களில் பயணித்த பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் கொள்ளையிடப்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

கிரேன்ட்பாஸ் பகுதியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளையும் அவர் திருடியுள்ளதாகவும், அந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபரை ஜீப் வாகனத்தால் வழிமறித்து கைது செய்துள்ளனர்.

கொள்ளைச்சம்பவங்கள் அதிகரிப்பு

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கடந்த மார்ச் 10 ஆம் திகதி மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகில் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியே குறித்த கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளையும் மஹரகம பிரதேசத்திலுள்ள ஒரேயொரு அடகு வைக்கும் நிலையத்திற்கே அவர் விற்பனை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

மோசமான வானிலை - விழிப்புடன் இருக்குமாறு பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மோசமான வானிலை - விழிப்புடன் இருக்குமாறு பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US